இலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்

உடுமலை, மார்ச் 20: உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: உடுமலை  மின்பகிர்மான வட்டத்தில் உடுமலை, பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி ஆகிய  கோட்டங்கள் இயங்கி வருகின்றன. உடுமலையில் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை  புகார் மையம் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த மூன்று கோட்டங்களுக்கு  உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பில் ஏற்படும் மின்தடை குறித்த  புகாரை 1912 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் உடனடி  நடவடிக்கை எடுக்கப்படும். வீணான காலதாமதம் தவிர்க்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மின் வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் வர தடை உடுமலை: உடுமலை  மின்வாரியம் நகர் பிரிவு அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு  கடைபிடிக்கப்பட்டது. உதவி மின் பொறியாளர் முருகன் தலைமை வகித்தார்.  மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் வரும் 31ம் தேதி வரை நேராக  அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து தங்களது குறைகள் மற்றும் விண்ணப்பத்தை  ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். நிகழ்ச்சியில்  அலுவலர்கள் மாரியப்பன், மேரிகலா, கண்ணன், சுந்தர், ஈஸ்வரன், நல்லமுருகன்,  விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து ஊழியர்களுக்கும்  முககவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது.

Related Stories: