நூலகங்களில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை

உடுமலை, மார்ச் 20: உடுமலை உழவர்சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் இரண்டில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி  சுகாதார ஆய்வாளர்கள் செல்வக்குமார், சிவக்குமார், செல்வம் ஆகியோர்  தலைமையில், சுகாதார பணியாளர்கள் நூலக வளாகம் மற்றும் வாசகர்கள் படிக்கும்  பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.மாவட்ட நூலக அலவலர் மணிகண்டன்  அறிவுறுத்தலின்பேரில், நூலகத்தில் வாசகர்கள் கைகழுவ விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நூலக வாயிலில் சோப்பு மற்றும் தண்ணீர்  வைக்கப்பட்டுள்ளது. கை கழுவிய பின்னரே வாசகர்கள் நூலகத்துக்குள்  அனுமதிக்கப்படுகின்றனர்.உடுமலை அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் லட்சுமிபதி ராஜ் ஆலோசனையின்படி நிலவேம்பு குடிநீர் வாசகர்களுக்கு வழங்கப்பட்டது.ஜல்லிப்பட்டி நூலகம்: இதேபோல,  ஜல்லிப்பட்டி கிளை நூலகத்திலும் வாசகர்கள் கை கழுவ குழாய் வசதியுடன் கூடிய  சிறிய டேங்க் அமைக்கப்பட்டு, சோப்பு மற்றும் ஈரம் துடைக்க காகிதம்  வைக்கப்பட்டுள்ளது. மேலும் சளி, இருமல், காய்ச்சல் கண்டவர்கள் நூலகத்திற்கு  வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிப்பையும் ஒட்டி உள்ளனர்.

Related Stories: