கொரோனா பாதிப்பு எதிரொலி ‘மாரி ஹப்பா’ பண்டிகை எளிமையாக கொண்டாட முடிவு

ஊட்டி, மார்ச் 20: கொேரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களால் கொண்டாடப்படும் மாரி ஹப்பா பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு

ள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள் தங்களுக்கு என்ற தனி பாரம்பரியத்தை கடைபிடித்து வருகின்றனர். இவர்கள், ஆண்டுதோறும் பாரம்பரிய பண்டிகையான மாரி ஹப்பா எனப்படும் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவதுவழக்கம். இந்த பண்டிகையின்போது, அந்தந்த கிராமங்களில் உள்ள அம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்த பின், உறவினர்கள் மற்றும் திருமணம் ஆகி வெளியூர் சென்ற பெண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து புத்தாடைகளை எடுத்துக் கொடுத்து கொண்டாடுவார்கள். இந்த பண்டிகையின், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்களை அழைத்து அசைவ விருந்து வைப்பதும் வழக்கம். இந்நிலையில், இந்த பண்டிகையை வரும் வாரங்களில் கொண்டாட தீர்மானித்திருந்த நிலையில், அனைத்து கிராம மக்களும் உற்சாத்துடன் இருந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தற்போது பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், இம்முறை மாரி ஹப்பா பண்டிகையை பெரும்பாலான கிராமங்களில் எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். சிலர், இப்பிரச்னைகள் முடிந்த பின் கொண்டாடுவது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். படுகர் இன மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை கொரோனா வைரஸால் தடைப்பட்டுள்ளதால், பெரும்பாலானவர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.  இது தவிர பெரும்பாலான கிராமங்களில் சித்தரை துவங்கினாலே கோயில் திருவிழாக்கள் நடத்துவது வாடிக்கை. ஆனால், கொரோனாவால், இம்முறை பெரும்பாலான கிராமங்களில் கோயில் பண்டிகைகளை எளிமையாக கொண்டாடுவது அல்லது ஒத்திவைப்பது குறித்தும் பொதுமக்கள் ஆலோசித்து

வருகின்றனர்.

Related Stories: