குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் சிறை நிரப்பும் போராட்டம்

விழுப்புரம்,  மார்ச் 19:  கொரோனா வைரஸ் பீதிக்கிடையே  குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக விழுப்புரத்தில் நேற்று  சிறைநிரப்பும் போராட்டம் நடந்தது. சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு  எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் சாஹின்பாக் எனப்படும் இரவு, பகல்  போராட்டத்தை இஸ்லாமிய மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள். என்.பி.ஆரை  தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் இயற்ற வேண்டும் என்பது  போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகின்றன. இதனிடையே  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்துக் கட்சிகளும் வரும் 31ம் தேதி  வரை தங்களது பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து  செய்துள்ளன.

சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களும் தற்காலிகமாக  தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் என்.பி.ஆருக்கு எதிராக தமிழக  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி இஸ்லாமியர்கள் வங்கிகளில் பணம்  எடுப்பது உள்பட பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை தொடர்கின்றனர். அதன்படி  நேற்று தமிழக தவ்ஹித் ஜமாத் சார்பில், தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும்  போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தவ்ஹித்ஜமாத்  சார்பில் நடந்த சிறைநிரப்பும் போராட்டத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள்  கலந்துகொண்டு தேசியக் கொடி மற்றும் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி எதிர்ப்பு  பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: