கலால்துறை அதிகாரி எச்சரிக்கை 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 500 ரேஷன் கடைகள் மூடல்

நாகை,மார்ச்19: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகையில் 500 ரேஷன்கடைகள் நேற்று மூடப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு இணையான ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணி வரன்முறை படுத்த வேண்டும். 100 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். தனித்துறை ஏற்படுத்த வேண்டும். பொருட்களை எடையிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று வேலூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, சேலம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்று கூடுவது தவிர்க்க வேண்டும் என்பதால் ஒருநாள் மட்டும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி நாகை மாவட்டத்தில் 500 ரேஷன் கடைகளை மூடி நேற்று ஒரு நாள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: