அன்புமணி இரட்டை வேடம் போடுகிறார்

புவனகிரி, மார்ச் 19: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பு.முட்லூர் ஜமாத் நிர்வாகம் சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு முகமது அன்வர் தலைமை தாங்கினார். பக்கீர்மொய்தீன், ஷேக் இப்ராகிம், அலாவுதீன், லியாகத்துல்லா, முகம்மது கவுஸ், அப்துல் கலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகம்மது ஜமீல் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் சிபிச்சந்தர், மதுரை ஹென்றி திபேன், பேச்சாளர ஜான்சிராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

அப்போது பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், மத்திய மாநில அரசு

களுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்

முருகன் நிருபர்களிடம் கூறுகையில். குடியுரிமை திருத்த சட்டம் ஒரு மோசமான கருப்பு சட்டம். அதனால்தான் இதை எதிர்த்து எல்லோரும் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கப் போவதில்லை. பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலேயே இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்ற நிலையில், எடப்பாடி அரசு ஏன் நிறைவேற்றவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் அன்புமணி இரட்டை வேடம் போடுகிறார். அவரது நிலைப்பாட்டை அன்புமணி தான் விளக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திமுகவின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், தவாக மாவட்ட செயலாளர் முடிவு அண்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறவாழி, மக்களவை தொகுதி செயலாளர் செல்லப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: