ரேஷன் கடைகளை மூடி பணியாளர்கள் போராட்டம்

சிதம்பரம், மார்ச் 19: தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்  சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது  போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த வாரம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்  நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகள்  எதையும் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நேற்று நியாய விலைக்கடை பணியாளர்கள்  ரேஷன் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம் நகரின்  பல்வேறு இடங்களில் நேற்று ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தது. கடைகள் திறக்கப்படாததால்  பொதுமக்கள் அரிசி, பருப்பு போன்ற  அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். சமவேலைக்கு சம  ஊதியம், 100 சதவீதம் கணினி மயம், ரேஷன் கடைக்கென தனித்துறை உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் இந்த போராட்டத்தை  நடத்தினர்.

Related Stories: