உத்திரமேரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

உத்திரமேரூர், மார்ச் 19: உத்திரமேரூர் பேரூராட்சியில் உத்திரமேரூர் பஸ் நிலையம், காவல் நிலையம், நீதிமன்றம், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், மருத்துவமனை உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.மேலும் பொது மக்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்படுகிறது. அதில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். முதியோர், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அதிக தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. பொது மக்கள் வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சோப்பு போட்டு கழுவுதல் அவசியம்.விடுமுறை நாட்களில் குழந்தைகள் குழுவாக விளையாடுவதை, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். தினமும் சுமார் 20 முறை கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கான அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், சோப்பு ஆகியவை வைக்க அறிவுறுத்தப்பட்டது. பல்லாவரம்: இந்தியாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர், வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்குநாள் தீவிரமடையும் இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்கும் வகையில், அரசும் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைதொடர்ந்து தாம்பரம் பகுதியில், பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், எப்பொழுதும் மக்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் மார்க்கெட், ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் தற்போது மக்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில், தாம்பரம் நகராட்சி சார்பில் அரசு பஸ், ஏடிஎம் மையங்கள், ரயில் நிலைய நடைமேடை ஆகிய பகுதிகளில் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.

Related Stories: