ஊரக புத்தாக்க திட்ட விழா

காளையார்கோவில், மார்ச் 19:  காளையார்கோவில் ஒன்றியத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் கிராம முதலீட்டு திட்டம் பள்ளித்தம்மம் ஊராட்சியில் ஊர் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. காளையார்கோவில் ஒன்றியம் பள்ளித்தம்மம் கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட முகாம் கடந்த 2ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம், கிராம அடிப்படை தகவல், கைவினைஞர்கள், விவசாயம், கால்நடைகள், கோழி வளர்ப்பு சேவை தொழில்கள், பாரம்பரியமான தொழில்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்கள், சொந்த தொழில் செய்வோர், சந்தை வாய்ப்புகள் போன்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் மகளிர் குழுக்கள், தொழில் முனைவோர் இளைஞர்கள் ஆகிய பல்வேறு குழுக்களும்  இலக்கு நோக்கிய கலந்தாய்வு செய்யப்பட்டு, முதல் நிலை தகவல்கள்  பெறப்பட்டது, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை முகாம் பராமரிப்புத் துறை, வருவாய்த்துறை மற்றும் கிராம ஊராட்சி செயலரிடமும் பெறப்பட்ட அனைத்து  தகவல்களும் மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம வளர்ச்சி திட்டம் கைபேசி செயலியில்  பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப் பிரியா கணேசன் தலைமை தாங்கினார். ஊரக புத்தாக்க திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன் திட்டவிளக்கவுரை ஆற்றினார்,  12வது நாள் நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்டம் மக்களிடம்  வாசிக்கப்பட்டது.

இறுதியாக கிராம முதலீட்டு திட்டம் தீட்டப்பட்டு முகாமில் ஒப்புதல் பெறப்பட்டன. முகாமில் செயல் அலுவலர்கள் பிரபு, செல்வக்குமார், ரமேஷ், கனகசுந்தரி, இளம் வல்லுனர் ராசு குட்டி, வட்டார அணித் தலைவர்கள், ஜீவியராஜ்  கொண்டனர். தொழில் முனைவோர் பற்றிய விளக்கங்களை மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்செல்வன், கிராம வளர்ச்சி திட்ட அணியினர் புவனேஸ்வரி, செல்வி, ஜெயா , ஜான்சி எலிசபெத், நட்சத்திரம், காளீஸ்வரி ஆகியோர் தகவல்களை மொபைல் செயலி மூலம் ஆவணப்படுத்தினர்.

Related Stories: