தெப்பக்குளத்திற்குள் இறங்கி போராட்டம்

சிவகங்கை, மார்ச் 19:  சிவகங்கை  அரண்மனை தெப்பக்குளத்தில் இறங்கி சிவகங்கை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர்  குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திடீர் போராட்டம் நடத்தியதால்  பரபரப்பு ஏற்பட்டது. இஸ்லாமிய கூட்டடைப்பினர்  சுமார் 30க்கும் மேற்பட்டோர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் திடீரென சிவகங்கை அரண்மனை தெப்பக்குளத்தில்  குதித்தனர். தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் உள்ள சுவரின் மீது நின்று  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேனரை பிடித்து போராட்டத்தில்  ஈடபட்டனர். தகவலறிந்த சிவகங்கை டவுன் போலீசார் மற்றும் அரண்மணை வாசல்  பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெப்பக்குள பகுதிக்கு  விரைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏடிஎஸ்பி மங்களேஸ்வரன்,  இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் கரைக்கு வந்தனர். இப்போராட்டத்தில்  இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்ந்த ரபீக், பைசல், அல்லாபிச்சை உள்பட 30க்கும்  மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல்  இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: