பெருமான் கோயிலில் பங்குனி உத்திர விழா

காரைக்குடி, மார்ச் 19: காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா 27ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேசுவர பூஜையுடன் துவங்குகிறது. இதனை தொடர்ந்து 28ம் தேதி காலை 5 மணி முதல் 5.45க்குள் கொடியேற்றமும், இரவு 8 மணிக்கு வெள்ளிகேடகத்தில் திருவீதி உலா. 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை வெள்ளிக் கேடகத்தில் வீதி உலா நடக்கிறது.

ஏப்ரல் 1ம் தேதி மாலை 6 மணிக்கு வள்ளி திருமணம், 9 மணிக்கு பூப்பல்லக்கு நடக்கவுள்ளது. 2ம் தேதி இரவு 8 மணிக்கு ருத்ராட்சக் கேடகம், 3ம் தேதி இரவு 8 மணிக்கு தங்கரதம், 4ம் தேதி இரவு 8 மணிக்கு வையாபுரியில் தெப்பம், வெள்ளி ரதம், 5ம் தேதி காலை 5.30க்கு தேருக்கு சுவாமி எழுந்தருளல், மதியம் 4.10 மணிக்கு தேரோட்டம், இரவு 8ம் மணிக்கு வீதி உலா நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து 6ம் தேதி காலை 12.15 மணிக்கு உத்திரம் தீர்த்தவிழா, இரவு 8 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளல் நடக்கவுள்ளது. 10ம் திருநாளை முன்னிட்டு அக்கினிக் காவடி உள்பட பல்வேறு காவடிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவர். விழாவை முன்னிட்டு நாதசுர இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: