கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சாயல்குடி, மார்ச் 19: முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நேற்று நடந்தது. முதுகுளத்தூர் பேரூராட்சி, சாயல்குடி பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. முதுகுளத்தூரில் செயல் அலுவலர் மாலதி, சாயல்குடியில் செயல்அலுவலர் சேகர் தலைமை வகித்தனர். கொரோனா வைரஸ் பரவும் முறை, மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ பரிசோதனை, சிகிச்சை முறை பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

பிறகு பள்ளிகள், கோயில்கள், பள்ளிவாசல், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் மற்றும் வெளியூர், வெளிமாநில பேருந்துகளில் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை போன்று கடலாடி நீதிமன்றத்தில் கொரோனோ வைரஸ் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நீதிபதி ராம்சங்கரன் தலைமையில் நடந்தது. சாயல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர் யாசர்அராபாத் கொரோனா வைரஸ், பரவும் முறை, பாதுகாக்கும் முறை குறித்து விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், வழக்கறிஞர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: