சோழவந்தான் அரசு பணிமனையில் கொரோனா விழிப்புணர்வு

சோழவந்தான்,மார்ச் 19: சோழவந்தான் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கொரோனா நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கண்காளிப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் ஆனந்த் வரவேற்றார்.இதையடுத்து கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ் பாண்டியன், கொரோனா வைரஸை தடுக்கும் வழிமுறைகள் குறித்து போக்குவரத்து தொழிலாளர்களிடம் எடுத்துரைத்தார்.

அடிக்கடி கைகளை கழுவுதல், இருமும் போது கர்ச்சீப்பால் மூடுதல், தேவையில்லாமல் கூட்டம் கூடுதலை தடுத்தல் உள்ளிட்ட பொதுவான நடைமுறையினை தொழிலாளர்கள் கடைப்பிடிப்பதுடன், இதை பஸ்சில் வரும் பயணிகளுக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சுகாதார துறையினர் அங்கிருந்த பஸ்களில் நோய் தடுப்பு கிருமி நாசினி தெளித்தனர்.

மேலும் பணிமனைக்கு இரவு திரும்பும் பஸ்களிலும் இதே போல் மருந்து தெளிக்கவும் அறிவுறுத்தினர். இதில் அனைத்து. போக்குவரத்து சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: