மாநகராட்சி ஏற்பாடு வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை சரிவு

மதுரை, மார்ச் 19: வரத்து அதிகரிப்பால் மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு ஊட்டி, கொடைக்கானல், பொள்ளாச்சி, மேட்டுபாளையம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரியில் காய்கறிகள் வருகின்றன. சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் விலையும் குறைவாக இருந்தது. விலையானது (ஒரு கிலோவிற்கு விலை) கத்திரிக்காய் ரூ.15, தக்காளி ரூ10, பச்சைமிளகாய் ரூ.15, பல்லாரி ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.25, சேனைக்கிழங்கு ரூ.20, கருணைக்கிழங்கு ரூ.30, சேம்பு ரூ.35, பீன்ஸ் ரூ.30, கேரட் ரூ.40, பாகற்காய் பெரியது ரூ.15, புடலங்காய் ரூ.10, காளிப்பிளவர் ஒரு பூ ரூ.15, நூக்கல் ரூ.10, டர்னிப் ரூ.20, பட்டர் ரூ.100, சோயாபீன்ஸ் ரூ.90, பச்சை பட்டாணி ரூ.40, அவரை ரூ.25, பீட்ரூட் ரூ.10, முள்ளங்கி ரூ.10, வெண்டைக்காய் ரூ.15, சீனிஅவரை ரூ.15, சாம்பல் பூசணிகாய் ரூ.10, சர்க்கரை பூசணி ரூ.10, முருங்கைக்காய் (கிலோ) ரூ.15, முட்டைகோஸ் ரூ.10, சுரைக்காய் ரூ.10, பச்சைமொச்சை ரூ.40, சவ்சவ் ரூ.10, கருவேப்பிலை ரூ.40, மல்லி ரூ.15, புதினா ரூ.20, பழைய இஞ்சி ரூ.60, புதிய இஞ்சி ரூ.30, கோவைக்காய் ரூ.20, வாலை இலை (ஒரு அடுக்கு) ரூ.10, வாழைக்காய் ஒன்று ரூ.3 என விலை இருந்தது.

இதில், முருங்கைக்காய் வரத்து கடந்த சில மாதங்களாக மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு வாரமாக வரத்து ்அதிகரித்து வந்ததது. நேற்று கிலோ ரூ.15க்கு முருங்கைக்காய் விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: