கொரோனா வைரஸ் தடுப்பு காரணத்தால்சாத்தனூர் அணை மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தண்டராம்பட்டு, மார்ச் 18: கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக சாத்தனூர் அணை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தண்டராம்பட்டு அடுத்துள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. தற்போது, விவசாயிகளின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் இடது புறம் மற்றும் வலது புறம், தென் பெண்ணையாற்றில் 35 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால், நேற்று மாலை சாத்தனூர் அணையில் 78.75 அடி நீர் இருப்பு உள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகளவில் பரவி வருவதால், தமிழக அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தளங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில், நேற்று மதியம் 1 மணி அளவில் சாத்தனூர் அணை கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என்று திடீரென மூடினர். இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories: