நெடுஞ்சாலையில் குப்பைகளை எரிப்பதால் புகை மூட்டம்

திண்டிவனம், பிப். 26: திண்டிவனத்தில்  சாலையின் நடுவே உள்ள குப்பைகளை தீ வைத்து எரித்ததால் சாலையில்  புகை மூட்டம் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.திண்டிவனத்தில்  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுச்சேரி சர்வீஸ் சாலை அருகே சாலையின்  நடுவே உள்ள குப்பைகளை சிலர் தீ வைத்து எரித்ததால் அதிகளவு புகை  மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் குடியிருக்கும்  பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில்  அதிவேகமாக செல்லும் வாகனங்களை புகை மூட்டம் சூழ்ந்து சாலை சரிவர  தெரியாததால் ஒரு சில வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. பின்னர் சுதாரித்துக் கொண்ட  ஓட்டுனர்கள் மெதுவாக வாகனத்தை இயக்க தொடங்கினர். அதிகளவு வாகனங்கள் செல்ல கூடிய  தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளை எரித்ததால் புகைமூட்டம் அதிகளவில் சூழ்ந்து  விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை  தீ வைத்து எரிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: