இருளில் மூழ்கிய திருக்கோவிலூர் தென்பெண்ணையாறு தரைபாலம்

திருக்கோவிலூர், பிப். 26:

விழுப்புரம்  மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து அரகண்டநல்லூர் பகுதியை  இணைக்க  தெண்பெண்ணையாற்றின் குறுக்கே கடந்த 50 வருடத்திற்கு முன் தரைபாலம்  அமைக்கப்பட்டது. இதனை திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், கீழையூர்,  அத்தண்டமருதூர், சைலோம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள  பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள்  தங்கள் நிலத்தில் அறுவடை செய்யப்படும் தானியங்களை அரகண்டநல்லூரில் உள்ள  மார்க்கெட் கமிட்டிக்கு எடுத்துசெல்ல இந்த தரைப்பாலத்தை உபயோகித்து வருகின்றனர். ஆனால் இங்கு மின்விளக்கு இல்லாததால்  இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக  விரோதிகள் பாலத்தின் இருபுறத்தையும் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி  வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்கள் தானியங்களை வாகனத்தில்  எடுத்துசெல்லும் போது தினந்தோறும் பிரச்னை ஏற்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.  ஆகையால்  தரைப்பாலத்தில் மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: