உளுந்தூர்பேட்டையில் ₹2.22 கோடியில் கிணறு வெட்டும் பணி

உளுந்தூர்பேட்டை, பிப். 26: உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் 2 கிணறுகள் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ குமரகுரு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கோடைக்காலம் வருவதற்குள் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது முன்னாள் துணை சேர்மன் சாயிராம், அதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ், நகர  செயலாளர் துரை மற்றும் நிர்வாகிகள் பழனிவேல், ராமசாமி, ராமலிங்கம், ராஜா, ராஜ்குமார், குணசேகரன், பாண்டியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: