பெண் குழந்தைகள் ஹீமோ குளோபினை அதிகரிக்க முருங்கைகீரை சாப்பிட வேண்டும்

திருத்துறைப்பூண்டி, பிப்.25: பெண் குழந்தைகள் ஹீமோகுளோபினை அதிகரிக்க முருங்கைக்கீரை, நிலக்கடலை சாப்பிட வேண்டும் என பாதுகாப்பு தினத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழு, திருத்துறைப்பூண்டி ஜேஸீஸ் சங்கம், பாரதமாதா குடும்ப நல நிறுவனம், மாவட்ட காசநோய் மையம் இணைந்து நெடும்பலம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் மற்றும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தலைமையாசிரியர் தங்கராசு தலைமை வகித்தார் .பாரத மாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் எடையூர் மணிமாறன் முன்னிலை வகித்தார். திருவாரூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ் செல்வி பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினர் சங்கீதா மணிமாறன் குழந்தைகளின் கடமைகள் குறித்தும், உரிமைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். மாவட்ட காசநோய் மைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெய்கணேஷ் கார்த்திக் பேசுகையில், காச நோயின் அறிகுறிகளாக தொடர்ந்து சளி இருமல் சளியில் ரத்தம் வருதல், பசியின்மை, அதிக எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியவையாகும் என்று. விளக்கமளித்தார். காச நோயை குணப்படுத்துவதற்கு மாதம் ரூபாய் 500 வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு 2025 க்குள் காசநோய் ஒழிக்கப்பட்டு விடும் என்றும் பெண் குழந்தைகள் ஹீமோகுளோபின் அளவு 12 -14 இருக்க வேண்டும் அதற்கு முருங்கைக்கீரை, எள்ளுருண்டை, நிலக்கடலை, தினசரி சாப்பிட வேண்டும் என்றார்.

முடிவில் ஆசிரியை யோகேஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories: