திருச்சி, பிப்.25: திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உத்தம நபி உதயதின விழா நடந்தது.இஸ்லாமிய கல்வித்துறை இயக்குநர் காதர் பக்க்ஷ் ஹுசைன் சித்திக் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுஹாஷினி எர்னெஸ்ட் வரவேற்றார். பொருளாளர் அப்துல்மஜீத், முதுகலை மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஷேக் முஹம்மது, நத்தர்ஷா தர்கா அறங்காவலர் டாக்டர் அலீம் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் இதயத்துல்லா, கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எம்.ஒய். ஹபிபுல்லா, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சையது ஜாபர், அய்மான் மகளிர் கல்லூரி முன்னாள் தாளாளர் ஷாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.