திருமாவளவன் கேள்வி மதுவின் தீமைகள் பற்றி விழிப்புணர்வு பேரணி

திருச்சி, பிப்.25: திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மது மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி சங்கம் ஓட்டல் வழியாக வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. இப்பேரணியில் ஈவெரா கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாதைகள் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். நிகழ்ச்சியில் உதவி ஆணையர்(கலால்) பாலசந்திரன், கல்லூரி முதல்வர் லில்லி, கோட்ட கலால் அலுவலர்கள் சேக்கிழார், சுப்பிரமணியன், ராஜவேல், ரேணுகா மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: