பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சியை சேர்க்க கோரி நாமம் இட்டு தரையில் படுத்து விவசாயிகள் திடீர் போராட்டம்

திருச்சி, பிப்.25: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சியை சேர்க்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நாமம் அணிந்து தரையில் படுத்து திடீர் போராட்டம் நடத்தினர்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது மனு கொடுக்க வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் 15 பேர் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் நாமம் இட்டு தரையில் படுத்து திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது திருச்சியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டத்தில் சேர்க்க வேண்டும் என கோஷமிட்டனர்.இது குறித்து விஸ்வநாதன் கூறுகையில், ‘திருச்சி மாவட்டத்தில் கரிகால் சோழன் கட்டிய கல்லணை உள்ளது. மாவட்டத்தில் 2 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் காவிரி மூலம் பாசனம் பெறும் டெல்டா பாசன பகுதியாக உள்ளது. எனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சியை சேர்க்க வேண்டும் என்றார்.

Related Stories: