அரியலூரில் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள்

அரியலூர், பிப்.25: அரியலூர் மாவட்டம், செந்துறையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10, 11,12ம் வகுப்பை சேர்ந்த பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர்கள் ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து, தங்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஊரக திறனாய்வு தேர்வில், மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவ - மாணவிகள் மற்றும் இணையதளம் வழியாக தங்களின் தனித்திறன் சாதனைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.

மேலும் இந்த மாணவர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஆசீர்வதித்தனர். முன்னதாக தலைமையாசிரியர் அமுதா விழாவை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தாளாளர் கலைவாணி, செயலாளர் அருள்மணி, பொருளாளர் சுப்பிரமணியன், இயக்குனர்கள் நாராயணசாமி, தங்கராசு, ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சாதனைகளை பாரட்டினர். முடிவில், தமிழாசியர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories: