வெண்பாவூரில் தனிநபர் ஆக்கிரமித்த கிணற்றை மீட்டுத்தர வேண்டும்

பெரம்பலூர்,பிப்.25: வெண்பாவூரில் தனிநபர் ஆக்கிர மிப்பில் உள்ள கிணற்றை மீட்டுத் தரக்கோரி கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெண்பாவூர் அம்பேத்கார் நகர், கிழக்குத் தெரு பொது மக்கள் திரண்டு வந்து அளித்தப் புகார் மனுவில் தெரி வித்திருப்பதாவது: நாங்கள் வெண்பாவூர் கிராமத்தில், அம்பேத்கர் நகரில் கிழக்குத் தெருவில் வசித்து வருகிறோம். எங்கள் தெருவில் வார்டு எண்- 5ல் ஊராட்சிக் கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம். அந்தக் கிணற்றின் மூலம் 120 குடும்பங்கள் தண்ணீர் எடுத்து அனுபவித்து வந்தனர்.

அந்தத் தண்ணீர் நல்லத் தண்ணீராக இருந்ததால் அதனையே அதிகமாகப் பயன்படுத்தி வந்தோம். தற்போது தூர்வாராத நிலையில் இருந்த அந்தக்கிணற்றை அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது வீட்டிற்குப் பக்கத்தில் இருப்பதால், அந்தக் கிணற்றை ஜனவரி 24ம்தேதி மண் அடித்துக் கொண்டு வந்து கொட்டி, அந்த மண்ணை ஜேசிபி வைத்து அள்ளி கிணற்றில் கொட்டி மூடிக்கொண்டு இருந்தார். இதையறிந்து நாங்கள் அங்கு சென்று மறித்துத் தடுத்து விட்டோம். அப்போது அவர், எனக்குக் கிணற்றை மூடுவதற்கு கலெக்டர் அனுமதி வழங்கி இருக்கிறார். அதனால் நீங்கள் மறித்தால் உங்கள் அனைவர் மீதும் வழக்குத் தொடருவேன் என்று சொல்லி, எங்களை மிரட்டிக்கொ ண்டு வருகிறார். எனவே கலெக்டர் கிணற் றை ஆக்கிரமித்துள்ள தனி நபர்மீது நடவடிக்கை எடுத்து, ஊராட்சிக் கிணற்றை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டும் என அந்தப்புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: