உடன்குடி பகுதி பள்ளிகளில் இலவச சைக்கிள் வழங்கல்

உடன்குடி, பிப். 25: உடன்குடி பகுதி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மெய்ஞ்ஞானபுரம் அம்புரோஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் பெஞ்சமின் லிண்டால் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கான்ஸ்டன்டைன் வரவேற்றார். எஸ்ஐ அமலோற்பவம் கலந்து கொண்டு 69 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். குலசேகரன்பட்டினம் திருஅருள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு குலசேகரன்பட்டினம் பஞ். தலைவர் சொர்ணபிரியாதுரை தலைமை வகித்து 11ம் வகுப்பை சேர்ந்த 31 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினார். முன்னாள் தலைமை ஆசிரியர் சிவபழனி ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

விழாவில் பஞ். துணை தலைவர் கணேசன், ஊராட்சி உறுப்பினர் ராமலிங்கம் என்ற துரை, தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிறிஸ்தியாநகரம் றிடிறிஏ மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் உதவி தலைமை ஆசிரியர் மைக்கேல் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் அருள்ராஜா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜெபசிங் மனுவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய ஆணையாளர் அரவிந்தன் கலந்து கொண்டு 107 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: