தொழிற்சாலை கழிவுகளால் புற்று நோய் அபாயம்

திருப்பூர்,பிப்.25:திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களிலிருந்து வெளியேறும்  கழிவுகளை ஒருங்கிணைத்து ஆபத்தான மற்றும் ஆபத்தில்லா தொழிற்சாலை கழிவுகளை அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் திருப்பூர் அப்பாச்சி நகர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சக்திவேல் தலைமை வகித்தார். கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிக்காத வகையில் அழிப்பது குறித்து தொழில் வல்லுனர் சுரேஷ் மனோகரன் பேசியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களான டையிங் வேஸ்ட், பிரிண்டிங் வேஸ்ட், எம்ப்ராய்டரி வேஸ்ட், எலாஸ்டிக் வேஸ்ட், டிரம்கள், இ-வேஸ்ட் ஆகியவற்றை பாறைக்குழியில் போட்டு எரிந்து வந்தோம். இதிலிருந்து வெளியேறும் புகை பொது மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தியது. நீர் நிலைகளில் கலந்து நிலத்தடி நீர் மாசு அடைந்தது. பொது மக்களுக்கு மூச்சு திணறல், ஒவ்வாமை, அரிப்பு உட்பட பல்வேறு வியாதிகள் ஏற்பட்டது. பொது மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறும் அபாயம் ஏற்பட்டது.

உலக சுற்றுச்சூழல் அமைப்பு பல்வெறு நாடுகளில் இயற்கையை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள், தொழில்வல்லுனர்களை கொண்ட குழு  பல்வேறு நிலைகளில் ஆலோசனை வழங்கியது. உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதைதொடர்ந்து அனைத்து நாடுகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர். ஒரு பொருளை எரிக்கும் போது புகை வெளியேறுகிறது. இந்த புகையாலும் நோய் தாக்குதல் உண்டு. இதை தவிர்க்க சிமென்ட் நிறுவனங்கள் பல்வேறுநிலைகளில் உள்ள அனைத்து கழிவுகளையும் கொள்முதல் செய்து ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரம் டிகிரி செல்சியசுக்கு எரிக்கும் போது சுற்றுச்சூழலுக்கு  மாசுஏற்படுத்தாமல் மாற்று பொருளான சிமென்ட் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளாக கிடைக்கிறது.

இந்த கருத்தரங்கிற்கு பல்வேறு சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிலிருந்து உயர் அதிகாரிகள் வந்துள்ளனர். இவர்கள்  பல்வேறு விளக்கங்கள் கொடுக்க உள்ளனர். எதிர்வரும் காலங்களில் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே மனித உயிர்கள் இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே அடுத்த சந்ததிகள் நோய் இன்றி முழு ஆரோக்கியததுடன் இருக்க முடியும்.

இவ்வாறு சுரேஷ் மனோகரன் பேசினார். கருத்தரங்கில், பின்னலாடை உற்பத்தியாளர்கள், உற்பத்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: