சாலை பணியை விரைவுப்படுத்தக்கோரி ராசா எம்.பி மத்திய அமைச்சருக்கு கடிதம்

அன்னூர்,பிப். 25:  நீலகிரி தொகுதி ராசா எம்.பி,. மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து, மூன்று நெடுஞ்சாலை திட்டங்கள் கடந்த 10 வருடங்களாக நிலுவையில் உள்ளது, எனவே அத்திட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

அதில் கரூர்-கோவைக்கு 114 கி.மீ. பைபாஸ் சாலை அமைக்கவும், கோவை- சத்தியமங்கலத்துக்கு 65 கி.மீ. சாலை விரிவாக்கம் செய்யவும், கிழக்கு புறவழி சாலை அமைக்கவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி கடந்த 3ம் தேதி ராசாவிற்கு அளித்த பதில் மனுவில் “நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து 2 நாட்களாக ஆய்வு செய்துள்ளோம். இதனை அடுத்து ஒவ்வொரு மாநில வாரியாக ஆய்வுக்கூட்டம், அதிகாரிகள் முன்னிலையில் நடத்த உள்ளோம். உங்கள் தொகுதியில் உள்ள திட்டங்கள் குறித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் செயல்படுத்த ஏதுவாக இருக்கும். அக்கூட்டத்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்” என பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: