வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்திற்கான வழிகாட்டும் துண்டுபிரசுரம்

பொன்னமராவதி,பிப்.25: பொன்னமராவதியில் பாதுகாப்பான பயணத்திற்கான வழிகாட்டும் துண்டு பிரசுரங்களை போக்குவரத்துப்போலீசார் வாகனஓட்டிளுக்கு வழங்கினர்.பொன்னமராவதி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மேரி தலைமையில் போக்குவரத்துப்போலீசார் ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டவேண்டும், இருசக்கர வாகனங்கள் பின்னால் உட்கார்ந்து செல்வோரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும், தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தை விளைவிக்கும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, சாலை வளைவுகளில் முந்திச்செல்லக்கூடாது, சாலையினை கடக்கும் போது கவனமாக செல்ல வேண்டும்.

சீட்பெல்ட் அணிந்து கார்கள் ஓட்டவேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. அதிக பாரங்களை ஏற்றிச்செல்லக்கூடாது உள்ளிட்ட போக்குவரத்து விதிகள் குறித்து வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அப்போது அதிக ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோவை மறித்து அதன் டிரைவர் மற்றும் அதில் பயணம் செய்தோருக்கு சாலை விதிகள் குறித்து விளக்கினர். போலீசார் வழங்கினார்

Related Stories: