கடவூர் தாலுகா தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்ககோரி குறைதீர் கூட்டத்தில் மனு

கரூர், பிப்.25: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கடவூர் தாலுகா பொதுமக்கள் மற்றும் கூட்டுக்குழுவினர் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டசெயலாளர் கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி, தங்கவேலு. பழனிவேலு உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கடைக்கோடியில் உள்ளது. இந்த தாலுகாவில் 23வருவாயக்கிராமங்கள் உள்ளன. இதில் 250க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. 23ஊராட்சித்தலைவர்கள், 16ஒன்றிய கவுன்சிலர்கள், 2மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர். தாலுகாவில் 1.50 லட்சம் மக்கள் உள்ளனர்.

பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, தோகமலை, மாயனூர், லாலாப்பேட்டை, வெள்ளியணை ஆகிய காவல்நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் குளித்தலை கோர்ட்டுக்கு செல்கிறது. மேலும்இந்த தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் நடந்துவருகிறது. இப்பகுதிமக்கள் நீதிமன்றத்தை நாட குளித்தலை செல்வதற்கு பேருந்து வசதியில்லை. எனவே தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது. கடவூரை மையமாகக்கொண்டு தரகம்பட்டியில் குற்றவியல் நடுவர் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைக்கவேண்டும். ஆனால் கிருஷ்ணராயபுரத்தில் அமைப்பதாக தெரியவருகிறது. தற்போது கடைக்கோடி கிராமத்தில் இருந்து குளித்தலை சென்றுவருவதற்கு 150கிமீ தூரம் உள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணராயபுரத்தில் அமைத்தால் மேலும் 40 கிமீ அதிகமாகும். 190கிமீ தூரம் பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

Related Stories: