கரூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை உடன் செலுத்த வேண்டும்

கரூர், பிப்.25: கரூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை உடனே செலுத்த வேண்டும் என ஆணையர் தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சி ஆணையர் சுதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் நகராட்சியில் 48வார்டுகளிலும் உள்ள மக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, வடிகால்வசதி, சாலைகள், சுகாதாரவசதி, தெருவிளக்குகள்போன்ற பல அத்தியாவசியமான பணிகள் நகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் யாவும் தடையின்றி மக்களுக்கு கிடைத்திட, நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாளா சாக்கடை கட்டணம், கடை வாடகை ஆகியவற்றுக்கான தொகையனை நகராட்சி வரிவசூல் மையத்தில் நிலுவையின்றி செலுத்த வேண்டும்.

மக்களின்நலன் கருதி அனைத்து வரிவசூல் மையங்களிலும் திங்கள் முதல் சனிக்கிழமைவரை காலை 7மணி முதல் மாலை 6மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7மணிமுதல் பிற்பகல் 2மணி வரையிலும் வசூல் செய்யப்படும். எனவே வரிபாக்கி வைத்திருப்பவர்கள் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பணிகளை செய்திடவும், நகராட்சி சட்டவிதிகளின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கையினை தவிர்த்திடவும் வரியை செசலுத்தி உதவிடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: