வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் அரசு பள்ளியில் மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

கரூர்,பிப்.25: பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தமிழகம் முழுதும் நேற்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வரிசையாக நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்திய குடிமகனாகிய நான், சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன், இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன் என்பன போன்ற வாசகங்களை கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories: