தென்னிலை கடைவீதி 4 சாலை சந்திப்பில் சிக்னல் அமைக்க வலியுறுத்தல்

க.பரமத்தி, பிப்.25: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி அடுத்து தென்னிலை கடைவீதி அமைந்துள்ளது. இப்பகுதி தென்னிலை கிழக்கு, தென்னிலை தெற்கு தென்னிலை மேற்கு ஆகிய மூன்று ஊராட்சிகள் சந்திக்கும் முக்கிய கடைவீயாக தென்னிலை உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேசன், வாரச்சந்தை, போஸ்ட் ஆபீஸ், மூன்று பஞ்சாயத்து அலுவலங்கள், வி,ஏ.ஓ அலுவலகங்கள், ஆர்.ஐ அலுவலகம், கூட்டுறவு சங்க அலுவலகம், மளிகை கடைகள், டீ மற்றும் ஹோட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

மேற்கண்ட அலுவலகம் மற்றும் கடைகளில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தென்னிலை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்ட குக்கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் தென்னிலை நான்கு வழி சந்திப்பில் கூடுகின்றனர். அதற்கு சின்னதாராபுரம் பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகளும், கொடுமுடி வழியிலிருந்து தென்னிலைக்கு வரும் வாகன ஓட்டிகளும் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருவது அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை கடைவீதியில் போலீசாரால் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நான்கு வழி சந்திப்பில் சிக்னல் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: