கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் தரமற்ற சாலையால் தடுமாறும் வாகனஓட்டிகள்

கொடைக்கானல், பிப். 25: கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை தரமற்ற நிலையில் உள்ளதாக வாகனஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் நகர் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரி பகுதியிலிருந்து மேல் மலைப்பகுதிக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள அப்சர்வேட்டரி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி துவங்கியது. ஆனால் தொடமழை காரணமாக சாலை அமைக்கும் பாதியில் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி மீண்டும் துவங்கி நிறைவடைந்தது. ஆனால் தரமற்ற பொருட்கள் காரணமாக ஜல்லி கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர். சேதமடைந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறுகையில், ‘கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் முதற்கட்ட பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. சில தினங்களில் சாலை பணி நிறைவடையும்’ என்றார்.

Related Stories: