தொண்டி பகுதி பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி

தொண்டி, பிப்.25:  தொண்டி மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று தொண்டி அரசு கிழக்கு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் உறுதி மொழி எடுத்தனர். தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் செய்யது யூசுப் தலைமையில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. தினைக்காத்தான் வயல் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை லதா தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி மொழி எடுத்தனர். இதில் இந்திய குடிமகனாகிய நான் சாதி மதம் இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தையுடனும் சமமாக நடந்துகொள்வேன். எனது செயல் மூலம் எந்த குழந்தையும் மனதாலோ உடலாலோ பாதிக்காத வகையில் நடந்துகொள்வேன். குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அதிகாரிகளுககு தெரியப்படுத்துவேன். குழந்தைகளின் வளர்ச்சிக்கு இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணத்தை தடுக்க எல்லா முயற்சியிலும் ஈடுபடுவேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Related Stories: