இலவச தையல் பயிற்சி

தொண்டி, பிப்.25: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சியில் பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவி சார்பில் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் கூடிய சுனாமிக்கு பின் நீடித்த வாழ்வாதார திட்டத்தின் கீழ் நம்புதாளை ஊராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு ஒரு மாதம் இலவச தையல் பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டது.

ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச்செல்வி ஆறுமுகம் தலைமை வகித்தார். துணை தலைவர் சுமையாபானு முன்னிலை வகித்தார். செய்யது யூசுப் வரவேற்றார். ஊராட்சி செயலர் சாந்தி துவக்கி வைத்தார். பெண்களின் மேம்பாடு குறித்தும் வாழ்வின் முன்னேற்றம் குறித்தும் பேசப்பட்டது.

Related Stories: