ராமகிருஷ்ணா பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை, பிப். 25: சிவகங்கை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் 98ம் ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலர் கண்ணப்பன் வரவேற்றார். இஸ்ரோ விஞ்ஞானி ஸ்ரீதரன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் வேங்கடகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தலைமையாசிரியை விஜயாள் ஆண்டறிக்கை வாசித்தார். படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், வட்டாரக்கல்வி அலுவலர்கள் பால்ராஜ், லதாதேவி, மேற்பார்வையாளர் ரூபாராணி, ஆசிரியர் பயிற்றுநர் ஜெயபிரகாசம் வாழ்த்தி பேசினர்.

Related Stories: