வரட்டாற்று ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை கோரி மனு கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை, பிப். 25: வரட்டாற்று ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில், தேனி கலெக்டர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி உஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. எங்களது விவசாய நிலத்தின் மத்தியில் வரட்டாறு செல்கிறது. வரட்டாற்றில் இரு இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. தாமரைக்குளம் பகுதி முழுவதும் நீர்ப்பாசனத்திற்காக வரட்டாற்றையே நம்பியுள்ளது.

இந்நிலையில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை பழனிச்சாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார். அவர் வரட்டாற்று பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக பயன்படுத்தி வருகிறார்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வரட்டாற்றில் 100 மீட்டர் அளவில் ஆக்கிரமித்து, சொந்த உபயோகத்திற்காக குழாய்கள் பதித்து, மரங்களையும் நட்டுள்ளார். 125 அடி தடுப்பணையில் 35 அடியை ஆக்கிரமித்து உள்ளார். ஆனால் அதிகாரிகள் வரட்டாற்று ஆக்கிரமிப்பை அகற்றாமல் புதிய தடுப்பணையை கட்ட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக உண்மையை அறிய வழக்கறிஞர் ஆணையர் குழுவை அமைத்து வரட்டாற்று ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் புதிய தடுப்பணை கட்ட தடை விதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர். மனு குறித்து தேனி மாவட்ட கலெக்டர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: