கம்பத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்

கம்பம், பிப். 25: கம்பத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா, நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கம்பம் அரசமரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் ஜெகதீஷ் தலைமையில், அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கினர். அதை தொடர்ந்து கம்பம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள், ரொட்டி, பிஸ்கட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் (பொறுப்பு) பர்வீன் பேகம், தலைமை செவிலியர் லைலா, மாவட்ட  அதிமுக செயலாளர் சையதுகான், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், முன்னாள் எம்பி பார்த்திபன், நகர அவைத்தலைவர் காந்தி, பொருளாளர் கருணாமூர்த்தி, துணைச்செயலாளர் அப்துல்ஆசிக், முன்னாள் நகரச்செயலாளர் பாலு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: