கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழிலாளர்கள் கோரிக்கை

விழுப்புரம், பிப். 25: கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் அருணாசலம், முனுசாமி, முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் தட்சணாமூர்த்தி, அருண்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கட்டுமானப்பொருட்களான செங்கல், மணல், சிமெண்ட், கம்பி ஆகிய பொருட்களின் விலைஏற்றத்தை கட்டுப்படுத்தி கட்டுமான தொழில் பாதிப்பின்றி நடைபெற மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்திற்கு சென்றுவர மானியவிலையில் இருசக்கர வாகனம் வழங்கவேண்டும். ஓய்வூதியத்தை ரூ.1000லிருந்து, ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: