சாராயம் கடத்திய 4 பேர் கைது

சின்னசேலம், பிப். 25: கல்வராயன்மலையில் உள்ள கிணத்தூர் ஓடையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் தலைமை காவலர் ராஜேஷ்பாபு, காவலர்கள் கலைக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் கிணத்தூர் ஓடைக்கு ரெய்டு சென்றனர். அப்போது அங்கு இரு வெவ்வேறு இடங்களில் சுமார் 20 பேரல்களில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார், அந்த பேரல்களை உடைத்து சேதப்படுத்தி, 4000 லிட்டர் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் பைக்கில் சாராயம் கடத்தி சென்றதாக பன்னியப்பாடி கிராமத்தை சேர்ந்த பிரபு (30), இளையா பிள்ளை (35), நடுமதூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (27) ஆகிய 3 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து 2 பைக், 165 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சியதாக கோவிந்தராஜ் (30) என்பவரையும் கைது செய்தனர்.

Related Stories: