நிவாரண தொகை போதுமானதாக இல்லை போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

பண்ருட்டி, பிப். 25: பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில், விவசாயிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. விவசாயிகள் தமிழ்மணி, கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். குமரேசன், நாராயணன், சங்கர், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கணிசப்பாக்கம், சித்திரைசாவடி, தொரப்பாடி, பணப்பாக்கம், கண்டரக்கோட்டை, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக சென்னை-கன்னியாகுமரி புதிய சாலை அமைக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமான நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் நில எடுப்பு சம்பந்தமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை போதுமானதாக இல்லை.

இது சம்பந்தமாக தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்சாலைதுறை அலுவலர்கள் ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததால் கணிசப்பாக்கம் முதல் அங்குசெட்டிப்பாளையம் வரை ஒவ்வொரு வீடுகளிலும் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்வது, உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: