சேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் ‘கோ பேக் டிரம்ப்’ முழக்கத்துடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரணமல்லூர், பிப்.25: சேத்துப்பட்டு அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் நிலுவை தொகை வழங்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று தொடர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் ‘கோ பேக் டிரம்ப்’ என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேத்துப்பட்டு அடுத்த கரைபூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கரும்புச் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தராமல் இழுத்தடிக்கும் நிலையை கண்டித்து நேற்று முற்றுகை போராட்டம் தொடங்கியது.இந்த போராட்டத்தின் போது மாலை 4 மணி அளவில் போராட்ட குழுவினர் திடீரென ‘கோ பேக் டிரம்ப்’ என்ற வாசகம் அடங்கிய பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன் கூறுகையில், ‘இந்தியாவிற்கு நேற்று வருகை தந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ₹42 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார்.அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கோழி லெக் பீஸ் மற்றும் பால் பவுடர் பொருட்களை இறக்குமதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை தற்போது உள்ள இந்திய மார்க்கெட்டின் விலையை விட குறைவாக உள்ளது. இதனால் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையும் சூழல் உருவாகும்.

Related Stories: