தொல்லியல் துறை அதிகாரிகள் எச்சரிக்கை நினைவு சின்னங்களில் அமர்ந்து மது அருந்தினால் கைது நடவடிக்கை

வேலூர், பிப்.25:தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களில் அமர்ந்து மது அருந்துவது, நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களில் எந்தவித மாற்றங்களும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறோம். அதேபோல் சுற்றுலா வருபவர்கள் நினைவுச் சின்னங்களை புகைப்படங்கள் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வெட்டுகளில் பெயர்களை எழுதுவது உள்பட சின்னங்களை சேதப்படுத்தும் செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.மேலும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் மது அருந்துவது, டிக் டாக் வீடியோக்களை பதிவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். சினிமா படங்கள் எடுக்கவும் உரிய அனுமதி பெற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது.

வேலூர் கோட்டை மதில்சுவரில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனுமதியின்றி கோட்டையில் பொது நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதேபோல், தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை, கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளுக்காக கேக் வெட்டி கொண்டாடுவது போன்ற செயல்களுக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு நிகழ்ச்சிகள் நடத்தினால், புராதன சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் கீழ் ₹500 அபராதம் விதிக்கப்படும்.கல்வெட்டுகளில் பெயர்களை பதிப்பது போன்ற அத்துமீறிய செயல்களால் நினைவுச் சின்னங்கள் பாதிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைதண்டனையுடன், ₹1 லட்சம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, முக்கியமான புராதன சின்னங்களை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதுதவிர சின்னங்களை யாராவது சேதப்படுகிறார்களா? என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.

Related Stories: