மக்கள் குறைதீர் முகாமில் மாற்று திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள்

திருவள்ளூர், பிப்.25: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கத்தில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர்  மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில்  பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த    பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 121 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் 36 மனுக்களும், கடனுதவி 3 மனுக்களும், குடும்ப   அட்டை வழங்க 6 மனுக்களும், வேலைவாய்ப்பு 42 மனுக்களும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம் 28 மனுக்களும், சட்டம் மற்றும் ஒழுங்கு 16 மனுக்களும் என மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பாக, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ. 7000ம் மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டியினையும், மும்மாரி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு, ஏரி, குளங்களை தூர்வாரிய கிராம  பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளை பாராட்டி நினைவு பரிசுகளையும் கலெக்டர்  வழங்கினார்.  

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  தங்கவேல்  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  பார்வதி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: