திருவாலங்காடு ஒன்றியத்தில் கிசான் கடன் அட்டைக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

திருத்தணி, பிப். 25: திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சியில் மத்திய அரசின் கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமை வகித்தார். வேளாண் உதவி அலுவலர் சிக்கந்தர்  பாஷா முன்னிலை வகித்தார்.

இதில், நல்லூத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கலந்துகொண்டு கிசான் கடன் அட்டை வாங்குவதற்கு மனுக்கள் அளித்தனர். முதல் நாளில் மொத்தம் 55 விவசாயிகள் கடன் அட்டை வழங்ககோரி  மனு விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து வேளாண் உதவி அலுவலர் சிக்கந்தர் பாஷா கூறுகையில், “மத்திய அரசின் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள், தங்களது நிலத்தின் கணினி சிட்டா அடங்கல், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் 2  ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இதில் தகுதியான விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படும். இந்த கடன் அட்டை பெற்றவர்கள் 5 ஆண்டுகள்  கடன் உதவி பெறலாம். இந்த கடன் பெறுவதற்கு பிணை இல்லாமல் கடன் தொகை  பெறலாம். மேலும் இந்த அட்டையின் மூலம் பயிர்களுக்கு தேவையான பூச்சிக்கொல்லி மருந்து உரம் ஆகியவற்றையும் பெற்றுக்கொள்ளலாம்” என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: