தாம்பரம் நகராட்சியில் விவசாயிக்கு 16 டன் இலவச இயற்கை உரம்

தாம்பரம், பிப். 25: தாம்பரம் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்நிலையில் நகராட்சி பகுதிகளிலுள்ள விடுகளில் இருந்து தினமும் மக்கும் குப்பைகள் பெறப்படுகின்றன. இதனை தரம் பிரித்து உரம் தயாரிக்க தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கன்னடபாளையம், மண்ணுரான் குளம், அம்மன் நகர், சேலையூர்  அம்பேத்கர் நகர், கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம், அருள் நகர், சேலையூர் சுடுகாடு ஆகிய பகுதிகளில் ஏழு நுண் உர செயலாக்க மையங்கள் மற்றும் 20 மிகச்சிறிய நுண் உர செயலாக்க மையங்கள் உள்ளன.

இந்த மையங்கள் வாயிலாக நகராட்சிக்கு 16 டன் இயற்கை உரம் கிடைத்துள்ளன. இந்த உரத்தை செய்யூரை சேர்ந்த விவசாயி பாரி என்பவருக்கு தாம்பரம் நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீன், ஆய்வாளர்கள் சிவக்குமார், ஜனார்த்தனன்  முன்னிலையில் நேற்று இலவசமாக வழங்கினர்.இதுகுறித்து தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையா ராஜா கூறுகையில், தாம்பரம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நுண் உர செயலாக்க மையங்கள் மூலம் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. எனவே உரம்  தேவைப்படுவோர் தாம்பரம் நகராட்சியை அணுகலாம்” என தெரிவித்தார்.

Related Stories: