வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாலாஜாபாத், பிப்.25: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் காசநோய் ஒழிப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.இதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் காசநோய் அலகின், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வேல்முருகன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நலக் கல்வியாளர் பாபு சுதந்திரநாத், முதுநிலை  சிகிச்சை மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ், ஆய்வக நுட்புநர் வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், காற்றின் மூலம் பரவக்கூடிய காசநோய்க்கான அறிகுறிகளான 2 வாரங்களுக்கு மேல் இருமல், உடல் எடை குறைதல், பசியின்மை, சளியுடன் இரத்தம் வருதல், மார்புவலி, மூச்சு இறைத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று இலவச சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, 6 மாதத்துக்கு சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுவதுடன், சிகிச்சை காலம் முழுமைக்கும்  மாதம் ₹500 ஊட்டச்சத்து உதவித்தொகை வழங்கப்படுகிறது என கூறினர்.

Related Stories: