ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு

ராஜபாளையம், பிப். 21: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேற்புறம் புதிதாக அமைந்துள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை தென்காசி எம்பி தனுஷ். எம்.குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டனர். ராஜபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தென்காசி தொகுதி எம்பி தனுஷ்.எம்.குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது எம்பி பேசுகையில், ‘மக்களுக்கும், விவசாயிகளுக்கும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் எங்கு உள்ளது என தெரியவில்லை. இதனை பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துமாறு நெல் கொள்முதல் நிலைய அலுவலர் பார்த்திபனிடம்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெல் அறுவடை நேரங்களில் நெல் கொள்முதல் நிலையத்தை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது’ என்றார்.

தொடர்ந்து எம்எல்ஏ பேசுகையில், ‘நெல் கிலோ சன்னரகம் நெல் 19.05 ரூபாய்க்கும் மோட்டா ரகம் 18.65 ரூபாய்க்கும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது விவசாயிகளின் நலன் கருதி கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர் பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, ஊராட்சி செயலாளர் சுருளி ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: