டவுன் காவல் நிலையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

அருப்புக்கோட்டை, பிப். 21: அருப்புக்கோட்டை  டிஆர்வி சாலையில் உள்ள கிட்ஸ்சி பள்ளி மாணவர்களுக்கு நகர்புறத்தில் உள்ள  முக்கிய இடங்களை அறிந்து கொள்ள பீல்டு ட்ரிப் என்ற அடிப்படையில் ரயில்வே  நிலையம், தபால் நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம், போன்றவை  காண்பிக்கப்பட்டது. நேற்று  டவுன் காவல்நிலையத்தை பார்வையிட வந்தனர்   மாணவ, மாணவிகளை டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பூ கொடுத்து வரவேற்றார்.   அவர்களிடம் சாலை விதிமுறைகள் குறித்தும், ஹெல்மெட் அணிவது, டிராபிக்  சிக்னல் பற்றியும் விளக்கி கூறினார்.

மேலும் தெரியாத நபர்கள்   கூப்பிட்டால்  செல்லக்கூடாது என்றும், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல்வதை  கேட்க வேண்டும் மரம் நடுதல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டும் என அறிவுரை கூறினார். மேலும் மாணவர்கள் காவல் நிலையத்தில் உள்ள  நூலகம், உடற்பயிற்சிகூடம், ஆகியவற்றை பார்வையிட்டனர்.

Related Stories: