சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் சேர்மன் தலைமையில் நடைபெற்றது

சாத்தூர், பிப். 21: சாத்தூரில் ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் செல்லத்தாய், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) காஜாமைதீன் பந்தே நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2019 டிசம்பர், 2020 ஜனவரிக்கான ஊராட்சி செலவினங்கள் குறித்த அஜண்டா வாசிக்கபட்டது. அதில் உள்ள தீர்மானங்கள் ஒன்றிய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விளக்கமளித்தார்.

பின்னர் அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றபட்டன. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் ஆங்காங்கே உள்ளன. எனவே அனைத்து பகுதிகளுக்கும் குப்பை தொட்டிகளை வைக்குமாறு தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: